More on this book
Kindle Notes & Highlights
Read between
December 11 - December 16, 2018
திருக்குறள் சிறப்பான தனித்துவ இலக்கியப் படைப்பு. ஆனால் அது எத்தனை போர்களைத் தடுத்தது? எத்தனை உயிர்களைக் காப்பாற்றியது?
மாந்திரீக யதார்த்தப் படைப்பு எழுதும்போது "காக்கை" என எழுதாமல் "புராதன சியாமள விகாச பட்சி" என்று எழுத வேண்டும்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் பாரதி. பெண்கள் ஆதிக்க சாதியாக இருப்பது அவர் கண்ணுக்கு உறுத்தவில்லை போலும்.
ஒரு வசதிக்காக அன்றன்றைக்கான டயரி குறிப்புகளை முந்தைய நாளே எழுதி வைத்துவிடுகிறேன்.
மனிதனுக்கு இரண்டு குழந்தைகள் வேண்டும். ஒன்று, ஆத்மார்த்தமாக வளர்க்க. இன்னொன்று, பரீட்சார்த்தமாக வளர்க்க.
எப்போதுமே, நம்மைப் புகழ்பவர்கள் வேறு யாரையெல்லாம் புகழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
"இங்கே நீ குடும்பத் தலைவனா நான் குடும்பத் தலைவனா?" எனக் கேட்டது வம்பாகிப்போய் "தகவலுக்குத்தான் கேட்டேன்" என்று சமாளிக்க வேண்டியதாயிற்று.
எனக்கு ஒரு மந்திரசக்தி வேண்டும். "வாய்ல என்ன கொழக்கட்டையா?" என மனைவியார் கேட்கையில் வாயில் நிஜமாகவே ஒரு கொழுக்கட்டை தோன்றிவிட வேண்டும்.
நல்ல வீணை செய்து அது கெடும்படி புழுதியில் எறியும் வழக்கம் நம்மிடையே உள்ளதா என பாரதி கேட்கிறார். நாம் அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?
அடுத்தவனின் மகிழ்ச்சியும் நிலைக்காது என்று ஆறுதலடையும் மனப்பக்குவம் நமக்கு அவசியம்.
ஆசையே நம்பிக்கைக்குக் காரணம்.
படிக்காமல் திட்டினால்தான் பிரச்சினை. படிக்காமல் புகழலாம்.
பத்திரிகைகளை "புக்கு" என்று அழைக்கும் வீட்டில் பெண் எடுக்காதே.
எல்லோரும் இன்புற்றிருக்க எனக்கு மட்டும் ஏனிப்படி என்றறியேன் பராபரமே.
தற்போதைய மனநிலை: அல்ஜைமர்ஸுக்கு ஏங்குதல்.
இன்றைய சண்டை இப்படித் தொடங்கியது: "இன்னிக்கி மழை எப்ப வரும்?" "எனக்கு எப்படிங்க தெரியும்?!" "ஏன், உனக்குத்தான் எல்லாமே தெரியுமே."
இன்று எனக்குத் தினபலனில் "வேறு ஏதாவது பேசுவோமே" என்று போட்டிருக்கிறான்.
பிஸியாக இருப்பது என்றால் என்ன? அந்த மாதிரி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
கலைகளிலே அவள் விமர்சனம்.
யாரையுமே முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. இதில்தான் ஒவ்வொருத்தன் பிழைப்பும் ஓடுகிறது. இதுதான் மனிதர்களை ஒட்டும் கோந்து.
ஒரு தெருச் சண்டையைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றேன். "கண்ட எடத்துல கமா போடுறவன்தானடா நீயி!" என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தன.
சிலரிடம் நல்லவர்கள் என்பதைத் தவிர உருப்படியாக வேறு எந்த அம்சமும் இல்லை. தாவரங்களைப் போல் வாழ்கிறார்கள்.
குழந்தைகள் வளர்ந்த பின்பு பெற்றோர் அவர்களை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அதாவது குழந்தைகள் வளர்ந்ததும் யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்களாம்.
தஸ்தயெவ்ஸ்கியின் நோட்ஸ் ஃப்ரம் தி அண்டர்கிரவுண்ட் குறிப்பிடத்தக்க நாவல். ஏனெனில் அது முழுக்க முழுக்க 'மைண்ட்வாய்ஸ்' உத்தியில் எழுதப்பட்டது.
தெருவில் கைக்குழந்தையுடன் பிச்சைக்குக் கைநீட்டிய இளம் தாயைப் பார்த்து மனம் கலங்கியது. கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். ஃபேஸ்புக் பழக்கம்.
சகமனிதர்களை நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும். ஆனால் விதிமுறைகள் இருக்கலாம்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் மடத்துக்குப் போய் மந்திரம் சொல்லுமாம்.
"சும்மா வாய்க்கு வந்த மாரி பேசாதெங்கோ. 'ங்கோத்தா இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?'-ன்றத ஸ்வாமிகள் ஆறு லாங்வேஜ்ல சொல்வார்."
என் வீட்டில் என் மனைவிதான் டெசிசன் மேக்கர். நான் வெறும் டெசிசன்.
உண்மை சில சமயங்களில் தன்னை மறைத்துக்கொள்ளும், ஆனால் ஒருபோதும் பொய் சொல்லாது.
நம் நிறைகள் என்று நாம் நினைக்கும் குணங்களை நம் மனைவிகள் குறைகளாகக் கருதுகிறார்கள். "அவரு எங்க வீட்டு மனுசங்களோட பழகவே மாட்டாரு."
அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்.
ஆட்டோவுக்குப் பின்னால் எழுதியிருக்கும் "Jesus loves you"வைப் பார்த்து வயதுப் பெண் போல் முகம் சிவக்கிறேன்.
சாம்ஸ்கிக்கு பீன்ஸ் பிடிக்குமாம். எனக்கு பீன்ஸ் பிடிக்காது. சாம்ஸ்கியுடன் முரண்படுகிறேன்.
மற்ற ஆண்களோடு பேசும்போது அடிக்கடி புடவைத் தலைப்பை சரிசெய்யும் பெரிய பெண்கள், என்னோடு பேசும்போது தாலியை வெளியே எடுத்து விட்டுக்கொள்வதோடு சரி.
ஆக்கபூர்வ விமர்சனம் அன்பை முறிக்கும்.
"அறிவின் இடத்தை அன்பு எடுத்துக்கொள்ளட்டும்" என்று ஒரு புதுமணத் தம்பதியை வாழ்த்தினேன்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் லேசுப்பட்டவளில்லை.
உலகிலேயே மிகச் சிறியது ஞாயிற்றுக்கிழமை.
"எந்த ஊர் என்றவனே" பாட்டைக் கேட்டால் தமிழ்நாட்டை ஒரு சுற்று சுற்றி வந்த மாதிரி இருக்கிறது.
புத்தகங்கள் படிக்காதிருப்பதும் ஒரு பழக்கம்தான். நிறுத்த முயன்றுபாருங்கள், மிகக் கடினமாக இருக்கும்.
கஜுராஹோ பார்த்திருக்கிறீர்களா? அங்கே மர்மஸ்தானம் எல்லாம் தேவஸ்தானம்.
.
.