“ஆளுக்கொரு சீட்டுக் கொடு, அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள்” என்றான். நானும் அந்த சீட்டுகளைப் பார்த்தேன். எனக்கு… “ஆண்ட்ரியாஸ் டாங்கன்… பத்திரிகையாளன்” முன்வந்து வணங்கினேன். “என் அருமை நண்பனே நீ எங்கே இங்கு வந்தாய்?” விஷயத்தை விவரித்தேன். முந்தைய இரவு சொன்னதையே சொன்னேன். உண்மையை மறக்காமல் புளுகினேன். இரவு நேரமாகிவிட்டது… துரதிருஷ்டம்… சாவி தொலைந்துவிட்டது. “ஆஹா” என்றான். அவன் சிரித்தான். “ நன்றாகத் தூங்கினாயா?” “மந்திரி மாதிரி தூங்கினேன் – மந்திரி மாதிரி” “சந்தோஷம்” எழுந்தான் அவன். “போய்வா குட்மார்னிங்” நான் போனேன். ஒரு சீட்டு. எனக்கும் ஒரு சீட்டு வேண்டும். மூன்று நீண்ட இரவுகளும் பகல்களும் நான்
...more

