More on this book
Community
Kindle Notes & Highlights
விந்தையான சிந்தனைகள், வினோதமான கற்பனைகள், அமைதியற்ற என் மூளையின் குழந்தைகள் ஆயிரக்கணக்கானவை தோன்றின.
Udhayakumar Tamileelam liked this
எதையும் உத்தேசிக்காது பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டேன். நாலு மூலைகளிலும் 1848 என்கிற வருஷத்தை எழுதினேன்.
“திறமையுடன் எழுதப்பட்டிருந்தது… மிகச் சிறந்த எழுத்து… மேதையின் சாயை… அரைப்பவுன்…”
பூரணமான தனிமையை இப்படி இரவுகளில்தான் அனுபவிக்க வேண்டும்.
பசி பூராவும் தீருமுன் மறுபடியும் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் வந்துவிடும். என் முதுகும் தோள்பட்டைகளும் தான் எனக்கு அதிகச் சிரமங்களைத் தந்தன. இருமி இருமி என் வயிற்றுக் கிள்ளலைச் சமாளித்துக் கொள்வேன். முன்னால் சாய்ந்து நடந்தாலும் வயிற்றுக் கிள்ளல் மரத்துவிடும். ஆனால் முதுகையும் தோள்களையும் வலிக்காமல் செய்வது எப்படி என்றுதான் தெரியவில்லை. என் நிலை மாறாமல் இருப்பதற்குத்தான் காரணங்கள் என்ன? மற்றவர்களைப் போல வாழ்வதற்கு எனக்கு உரிமை கிடையாதா என்ன? புஸ்தக வியாபாரி பாஸ்காவுக்கும், கப்பல் ஏஜெண்டு ஹென்னெஷினுக்கும் இருந்த உரிமை எனக்குக் கிடையாதா? என் தோளில் வலுவில்லையா? என் கைகள் உழைக்க மறுத்தனவா?
...more
“டாங்கன், ஆண்டிரியாஸ் டாங்கன்”
“பத்திரிகையாளன் – டாங்கன் காலைச் செய்தியில் வேலை” ஆஹா; தினச் செய்தியில் வேலை என்றதும் அவனுக்குத் திருப்தியாகிவிட்டதே, சாவியை மறந்துவிட்டேன். வீட்டிலே பணப்பையில் ஆயிரம் க்ரோனர் போட்டு வைத்து மறந்துவிட்டேன். பிரத்தியேக அறைக்கு அனுப்பு இந்தக் கனவானை….
“ஆளுக்கொரு சீட்டுக் கொடு, அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள்” என்றான். நானும் அந்த சீட்டுகளைப் பார்த்தேன். எனக்கு… “ஆண்ட்ரியாஸ் டாங்கன்… பத்திரிகையாளன்” முன்வந்து வணங்கினேன். “என் அருமை நண்பனே நீ எங்கே இங்கு வந்தாய்?” விஷயத்தை விவரித்தேன். முந்தைய இரவு சொன்னதையே சொன்னேன். உண்மையை மறக்காமல் புளுகினேன். இரவு நேரமாகிவிட்டது… துரதிருஷ்டம்… சாவி தொலைந்துவிட்டது. “ஆஹா” என்றான். அவன் சிரித்தான். “ நன்றாகத் தூங்கினாயா?” “மந்திரி மாதிரி தூங்கினேன் – மந்திரி மாதிரி” “சந்தோஷம்” எழுந்தான் அவன். “போய்வா குட்மார்னிங்” நான் போனேன். ஒரு சீட்டு. எனக்கும் ஒரு சீட்டு வேண்டும். மூன்று நீண்ட இரவுகளும் பகல்களும் நான்
...more
ஒரு நால் முன்னால் போனால் என்ன? பின்னால் போனால் என்ன? தவிர்க்க முடியாதது எப்படியும் நிகழ்ந்துவிடும்.
மாடி ஜன்னல் ஒன்றின் வழியாக ஒரு குட்டிப் பெண் எட்டிப்பார்த்தாள். எதையோ யோசித்துக் கொண்டிருப்பவன் போல மெதுவாகத் தலையைக் குனிந்துகொண்டே நடந்தேன். “உலகம் உன்னை எப்படி நடத்துகிறது?” என்று என் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். குழியான கன்னம். தெருவோடு போன ஒரு பெண் என்னைக் கண்டு பயந்து ஒதுங்கிப் போனாள். அப்படியாகி விட்டேனா நான்? கன்னங்கள் இரண்டும் கிண்ணங்களாகி மண்டைக்குள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. உண்மையில் பயங்கரமாகத்தான் இருந்தேனா நான்? பசியினால், உயிர் வாழ்வதற்காக நான் உருவ அழகு இழந்தே தீர வேண்டுமா? ஆத்திரமாக வந்தது எனக்கு. ஆனால் அந்த கோப வேகத்தைத் தாங்கக் கூட என் உடலில் சக்தியில்லை. ஒரு
...more
கண் பஞ்சடைய புத்தகங்கள் படித்தேன். மூளை உருகி ஓட சிந்தித்தேன். என்ன லாபம்? தெரு அழகி கூட என்னிடமிருந்து விலகி பயந்து ஓடுகிறாள். புரிகிறதா?
என்னுடன் வா. நான் என் கடிகாரத்தை அடகு வைத்துப் பணம் வாங்கப் போகிறேன். வாடா பாவி – பட்டினி கிடக்கிற பாவியே வா. ஒரு ஐந்து ஷில்லிங்காவது தருகிறேன்” என்று என்னையும் உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.
விதி யார் என்ன என்று கவலைப்படுவதில்லை; இரக்கம் காட்டுவதுமில்லை.
தெருக் கற்களிலிருந்து குதிரையின் குளம்புகளுக்கடியிலிருந்து பொறி பறந்தது.
என் உடலை நானே பார்த்து அழுதுவிட்டேன். பல வாரங்களாக ஒரே சட்டையைப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேன். வியர்வை நாற்றம் புழுங்கியது. ஒரு இடத்தில் அது கெட்டிப்பட்டு என் வயிற்றை அறுத்துக் கீறல் போட்டுவிட்டது. ரத்தம் கட்டிப் போயிருந்தது.
இரக்கம் காட்டாமல் பசி எனக்குள் அரித்தது. மாயமாக வேலை செய்தது குடலில். குடலை அரித்துத் தின்னும் பல லக்ஷம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். ஒரு விநாடி ஓயும் – மீண்டும் தொடங்கும். அவை போன இடமெல்லாம் சூனியம்தான்….
ஷேக்ஸ்பியரின் கற்பனையல்லவா மனசாட்சி என்கிற மனித உறுப்பு.
சரக்கு ஏற்றிக் கொண்டு லீத் போய் வரும்போது காடிஸிலிருந்து கரி ஏற்றிவருவோம். எங்கு போனாலும் எனக்கு ஒன்றுதான் . என் வேலையைச் செய்ய நான் தயார் கப்பல் பயணம் புதிதா உனக்கு?” ஆமாம், ஆனால் வேலையை முழு மனத்துடன் செய்வேன். எதுவானாலும் எல்லாம் செய்து பழக்கமுண்டு”
“சரி பார்க்கலாம். திருப்தியில்லாவிட்டால் நீ இங்கிலாந்துக்குப் போய்விடலாம்…” எனக்கு அவன் வேலை தந்துவிட்டான். கடலில் போய்க் கொண்டிருக்கும் போது மேல்தளத்துக்கு வந்து கிறிஸ்டியானியா நகரத்திடம் விடை பெற்றுக் கொண்டேன். இரவில் நகரத்து வீடுகளின் ஜன்னல்கள் பளபளத்தன.; “இப்ப சத்தியமா விடை பெற்றுக் கொள்கிறேன், அழகிய நகரே”

