இதற்கு முன் இல்லாதிருந்த ஒரு மெருகு அவளில் ஏறியிருக்கிறது என்றுதான் முதலில் பட்டது. அவள் முகம் பொலிவடைந்திருக்கிறது. கன்னங்களில் சிவப்பும் திரட்சியும் ஏறியிருக்கின்றன. பருவின் சிவப்புத் திட்டுகளுக்கு நிறம் கூடியிருக்கிறது. கழுத்தின் வளைவில் தோலின் மினுமினுப்பு, நடையில் எச்சரிக்கை, பார்வையில் மிரட்சி, எதையோ மனதுக்குள் அசைபோடும் கனவுச்சாயை. பிரான்ஸிஸ் தன் அனுபவத்தால் ஒன்றை அறிந்தான். அவள் இன்னமும் கன்னி அல்ல.

![ரப்பர் [Rubber]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1534965343l/41435300._SY475_.jpg)