பெருவட்டரின் வட்டாரத்தில் புகுந்த சில நாட்களுக்குள்ளேயே எபன் எத்தனை பெரிய முட்டாள் என அவள் புரிந்து கொண்டாள். எபனும் மற்ற எத்தனையோ பேரும் உயிரிழந்ததும் வாழ்வைக் குலைத்ததும் யாருடைய நன்மைக்காக என்பது அப்போது தெரிந்தது. குமரி மாவட்டம் உருவான நாள் மார்த்தாண்டத்தில் ரப்பர் முதலாளிகளின் விருந்து நடைபெற்றது. முதல்முறையாக அன்றுதான் அவள் மதுவருந்தினாள். எபனை எண்ணி அன்றிரவு முழுக்கச் சிரித்தாள்.