ரப்பர் [Rubber]
Rate it:
1%
Flag icon
“எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மனந்திரும்பி குழந்தைகளைப்போல ஆகாவிடில் பரலோக ராஜ்ஜியத்திற்குத் தூரமாக இருக்கிறீர்கள்.”
11%
Flag icon
“பாஸ்டர், நீங்க கோபப்படலாமா? கிறிஸ்துவுக்கு பேரால கேக்குதேன்.” “கிறிஸ்து நொட்டினாரு, நான் இதுக்கு ஒரு வளி உண்டா எண்ணு பாக்குதேன்.”
17%
Flag icon
தாத்தா முகம் சுளித்தபடி சற்று நேரம் ஜன்னல் வழியாக வெறித்தார். பிறகு மெல்லக் குரலைத் தாழ்த்தி, “பாவப்பட்ட எடத்தில் வல்லதும் பார்க்கணுமா? பணக்காரியோ படிச்சவளோ வேண்டா மெங்கி வேண்டாம்...” என்றார். இவன் மனம் உறைந்தது. கண்கள் மங்குவது போலிருந்தன. இவனுள் புகுந்து எல்லா ரகசியங்களையும் தாத்தா பார்த்துவிட்டார் என்று தோன்றியது. அது பீதியையும் அதே சமயம் ஒருவித பாரமின்மையையும் ஏற்படுத்தியது.
18%
Flag icon
குடியான் ரகளை பற்றிக் கேள்விப்பட்டதும் நம்ப முடியாததாகவே இருந்தது. இரண்டு தலைமுறைகளுக்கு முன் நடந்தது. ஆனால் இன்று புராணக்கதைபோல ஆகிவிட்டது எல்லாம். ஒரு காலத்தில் தன்னுடைய சாதி - ஆடுமாடுகளைப்போல தொழுவங்களில் வசித்து, நுகங்களில் மாட்டப்பட்டு, அடிமை வேலை செய்து, வாழ்ந்து வந்தது என்பது அவனுக்கு ஒரு செய்தியாகத்தான் தெரிந்தது. அதைக் கற்பனையில் விரித்துக்கொள்ளவே இயலவில்லை. அரை
19%
Flag icon
அவனுக்குள் எப்போதும் நாயர்கள் மீது ஒரு கனிவு உண்டு. இன்றுவரை ஒரு நாயரை ‘அடே!’ என்று கூப்பிட அவனால் முடிந்ததில்லை. அவன் மதிப்பீட்டில் மரியாதைக்குரிய அம்சங்கள் உடைய எந்த நாயரையும் அவன் பார்த்ததில்லை. இந்த மனப் பலவீனம் ஏன் தனக்குள் இருக்கிறது என்று பிரான்ஸிஸ் நினைத்ததுண்டு. அவன் மூதாதையரைத் தெருவில் வெட்டிச் சாய்த்த சாதி அது. காலம் விரையும் வேகத்துடன் விரைய மனித மனங்களால் முடியவில்லை போலும். பாட்டன் யானை மீது அமர்ந்ததன் தழும்பு தன் உடம்பிலும் இருப்பதாகக் கூறித் திரியும் நாயர்கள் கூட இறந்த காலத்தில் வாழ்பவர்கள்தாம்.
20%
Flag icon
இதற்கு முன் இல்லாதிருந்த ஒரு மெருகு அவளில் ஏறியிருக்கிறது என்றுதான் முதலில் பட்டது. அவள் முகம் பொலிவடைந்திருக்கிறது. கன்னங்களில் சிவப்பும் திரட்சியும் ஏறியிருக்கின்றன. பருவின் சிவப்புத் திட்டுகளுக்கு நிறம் கூடியிருக்கிறது. கழுத்தின் வளைவில் தோலின் மினுமினுப்பு, நடையில் எச்சரிக்கை, பார்வையில் மிரட்சி, எதையோ மனதுக்குள் அசைபோடும் கனவுச்சாயை. பிரான்ஸிஸ் தன் அனுபவத்தால் ஒன்றை அறிந்தான். அவள் இன்னமும் கன்னி அல்ல.
20%
Flag icon
ஒரு பரிவு இந்தப் பெண்ணிடமும் அவனுக்கு இருந்தது. அவள் யார் என்று அவனுக்குத் தெரியும். பிறருக்குத் தருவதைவிட அதிகம் சம்பளம் அப்பா அவளுக்குத் தருகிறார் என்பதும் தெரியும். அதற்குக் காரணமும் தெரியும். விருந்தினர்களிடம், அவள் காபி பரிமாறி உள்ளே போய்விட்ட பிறகு, ரகசியமாய், அவள் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவள் என்றும், வாழ வழியில்லாத கட்டத்தில் அவளுக்கு வேலை தந்து அந்தக் குடும்பத்துக்குப் பண உதவி செய்ததைப் பற்றியும் கூறி அப்பா பெருமைப்படுவதை அவன் கண்டதுண்டு. அவர் முகம் குழந்தைத்தனமாகக் கிளர்ச்சியும் பெருமையும் கொண்டு சிவந்து காணப்படும்.
21%
Flag icon
பிரான்ஸிஸ் சோபாவில் அமர்ந்தான். அவளையே கண் கொட்டாமல் பார்த்தான். அவன் உடம்பு முழுக்க ஜ்வரம் தகித்தது. அவள் அந்தப் பார்வையைக் கவனித்தாள். ஆனால் சற்றும் கூசவில்லை. அவள் சகஜ பாவம் மாறியது. அவள் புன்னகை பெரிதாகியது. “என்ன ரொம்ப குஷியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே...” என்றாள். பிறகு சட்டென்று திரும்பி உடம்பை அளவுமீறி ஆட்டியபடி, பக்கவாட்டு அறையை நோக்கி நடந்தாள். ஒரு முறை பிரான்ஸிஸைத் திரும்பிப் பார்த்தபிறகு, அவனுக்கு நிறைய அர்த்தங்களைத் தரும் பார்வை ஒன்றை அளித்தாள்.
22%
Flag icon
“ஒனக்க அம்மய விட பெரிய மோசமானவ எவடா இருக்கா?” அவள் கூர்மையாகத் தமிழில் கேட்டாள். “மதம் பிடிச்சவளைக் கேட்கத் துப்பில்லை, வயித்துக்கு வழியில்லாதவளைக் கேக்க வாறான்... தூ...”
31%
Flag icon
பெருவட்டரின் வட்டாரத்தில் புகுந்த சில நாட்களுக்குள்ளேயே எபன் எத்தனை பெரிய முட்டாள் என அவள் புரிந்து கொண்டாள். எபனும் மற்ற எத்தனையோ பேரும் உயிரிழந்ததும் வாழ்வைக் குலைத்ததும் யாருடைய நன்மைக்காக என்பது அப்போது தெரிந்தது. குமரி மாவட்டம் உருவான நாள் மார்த்தாண்டத்தில் ரப்பர் முதலாளிகளின் விருந்து நடைபெற்றது. முதல்முறையாக அன்றுதான் அவள் மதுவருந்தினாள். எபனை எண்ணி அன்றிரவு முழுக்கச் சிரித்தாள்.