More on this book
Kindle Notes & Highlights
காலம் விரையும் வேகத்துடன் விரைய மனித மனங்களால் முடியவில்லை போலும்.
சம்பாதிக்கிறவனுக்கு செலவழிக்க முடியாது. செலவழிக்கிறவனுக்கு சம்பாதிக்கவும் முடியாது.
இத்தனை செல்வம் எதற்கு மனிதனுக்கு? அது மனிதனை நல்ல வழியில் செல்லத் தூண்டாது. சுகபோகங்களைக் குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிப்பதுதான் மனித மனம் கொள்ளும் வறட்சியின் எல்லை.
காத்திருப்பவன் பயணத்தை எப்படி முடித்துக்கொள்வான்? ஆம், வாழ்பவர்கள் எல்லாரும் காத்திருப்பவர்கள்தாம். காத்திருக்க ஏதுமற்ற கணம் மரணம். எதுவரை காத்திருப்பு? அடையும் வரை, அடைந்த பின் இன்னொன்று.