வாழ்வின் பேருவகை பொங்கும் ஒரு காதலுக்கான இரகசியக் கணம் என்பது காதலியின் மடியில் படுத்து சரீரத்தால் அதிகமும், வார்த்தைகளால் கொஞ்சமுமாய் உரையாடின பொழுதுகள்தான். அது அவர்களுக்கு மட்டுமேயானது. அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்து, எல்லாம் வறண்டுபோன ஒருவெற்றிட காலத்தில் அவர்கள் மட்டுமே எடுத்துப் பருகிக் கொள்ள அவர்களுக்குள்ளேயே ஒரு திறக்கப்படாத ஊற்றுமாதிரி பொதிந்து கிடப்பது.