நாடு முழுக்க அலைவுற்ற அந்தக் கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள், எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்துநாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சைமிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள், தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்குக் கிடைப்பது எப்போதும் என்னைப் பொறாமைப்படுத்துவது.