More on this book
Kindle Notes & Highlights
Read between
March 6 - March 8, 2023
நான் கடவுள் நம்பிக்கையற்றவன், அல்லது தாங்க முடியாத பல தருணங்களில் கடவுள் என்று ஒன்று இருந்தால் பக்கபலமாக இருக்குமே என்று, கொண்ட கொள்கைக்குத் தெரியாமல் உள்ளூர நினைத்துக் கொள்ளும் பலகீனமானவன்.
Vairamayil liked this
எந்தப் புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்தச் செடி நினைவில் வைத்திருக்கும்.
Vairamayil liked this
எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை.
Vairamayil liked this
நுண் உணர்வுகளையும், இசை மனதையும் கவர்மெண்ட் குப்பைகளும், கோப்புகளும் அடைத்துக் கொள்கின்றன. திமிறி மீண்டு வருபவன் கையில் கொடுப்பதற்குப் பூங்கொத்துகளோடும், வீணைகளோடும் தேவதைகள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது” நான் மரமாக மாற முடியாத ஒரு மரண அவஸ்தை இது.
வாழ்வின் பேருவகை பொங்கும் ஒரு காதலுக்கான இரகசியக் கணம் என்பது காதலியின் மடியில் படுத்து சரீரத்தால் அதிகமும், வார்த்தைகளால் கொஞ்சமுமாய் உரையாடின பொழுதுகள்தான். அது அவர்களுக்கு மட்டுமேயானது. அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்து, எல்லாம் வறண்டுபோன ஒருவெற்றிட காலத்தில் அவர்கள் மட்டுமே எடுத்துப் பருகிக் கொள்ள அவர்களுக்குள்ளேயே ஒரு திறக்கப்படாத ஊற்றுமாதிரி பொதிந்து கிடப்பது.
எல்லாவற்றையும் இழந்துவிட்டு, ஒருவருக்கு இன்னொருவர் மட்டுமே ஆறுதல் என்ற வாழ்வின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு முதிய கணவன், மனைவியின் அளவிட முடியாத நேசம் அது. சிதம்பரம் கோவிலின் பருத்த கல்தூண்களுக்கிடையே கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு, கடந்து போன வாழ்வின் நெரிசல்களையும், நேசத்தையும் கண்களால் பகிர்ந்து கொள்ளும் அக்காட்சியை பாலேந்திரன் வாசிக்க, வாசிக்க என் அம்மாவிலிருந்து, வம்சி வரை கண்களைத் துடைத்துக் கொண்டோம்.
Vairamayil liked this
சிலர் விட்டகன்றிருப்பினும் அரூபமாய் அங்கேயே தங்கியிருப்பது மாதிரி அவன் குரலும், அவன் வாழ்வின் குரூரமான பகுதிகளும் அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது.
ஒரு நல்ல உரை என்பது அவ்வுரையை, அதைப் பேசியவனே ஒலிநாடாவில் கேட்டு எழுதுகிறபோது ஒரு வார்த்தையும் உதிராமல் இருக்கவேண்டும். அப்போது அவன் தெரிந்து கொள்ளலாம், தன் எதிரில் உட்கார்ந்திருப்பவனை ஏமாற்ற, மகிழ்விக்க தான் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை...
நாடு முழுக்க அலைவுற்ற அந்தக் கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள், எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்துநாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சைமிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள், தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்குக் கிடைப்பது எப்போதும் என்னைப் பொறாமைப்படுத்துவது.
கலைஞர்களின் வாழ்வை ஒரு பறவையின் புதிர் நிரம்பிய வாழ்வைப் போலவே நம் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது நண்பர்களே!
Vairamayil liked this
“பௌர்ணமி நிலவு, உலகம் முழுக்கத் தோன்றுவதுதானெனினும், திருவண்ணாமலையிலிருந்துதான் அது தன் சகல சௌந்தர்யத் தோடும் கர்வப்படுகிறது”
Vairamayil liked this
“மிக சந்தோஷமான வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் முன் பகுதியில் சூழ்ந்த நரகத்தை, இம்மலை கழுவி சுத்தப்படுத்தி, ஒரு குழந்தைக்கு வெண்ணிற ஆடை போர்த்தி, பொத்திக் கொள்வது மாதிரி என்னை அரவணைத்து நிற்கிறது பவா.”
‘உலகின் ஒட்டுமொத்த சுவையைச் ஒரு சின்ன சாக்லேட் பேப்பரில் சுற்றி, தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறான்’
Vairamayil liked this
தொடர் வாசிப்பு என்பது எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தலுக்கான ஒரு சிறந்த வழி என்பதைத் தெரிந்து வைத்திருந்தேன்.
Vairamayil liked this
உயரம் எதுவென அறியாத அப்பனிமலையில், ஒரே நேரத்தில் ஒரு குழு ஏறிக் கொண்டிருக்கையில், இன்னொரு குழு இறங்கிக் கொண்டிருக்கிறது. தூரமறிய ஏறும் ஒவ்வொருவரும், இறங்குபவனைப் பார்த்து கேட்கிறான்... ‘இன்னும் எவ்வளவு தூரம்?’ ‘தோ, கொஞ்சம் தூரந்தான்.’ இது பயிற்றுவிக்கப்பட்ட பாடம்.
“யாரு சாமி இவன்? எங்கிருந்து வந்தான்? இவன் யாரோட மிச்சம்?” எனத் துள்ளும் ஒரு காட்சி உண்டு. அத்துள்ளல் கொண்டாட்டம் சம்மந்தப்பட்டது. உள்ளுக்குள் பொங்கும் பெருமிதப் பொங்குதல் அது. அது இடம், தகுதி, அந்தஸ்து, வயது எல்லாவற்றையும் துடைத்தெறிந்து, மனிதனை ஒரு குழந்தையைப்போல் நிர்வாணப்படுத்தி, மழையில் ஆனந்தக் களியாட வைக்கும். இரண்டு,
தன் வாழ்வின் சுழற்சியில், நம் மரபில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் தக்கவைக்க, ஒரு சிறு முயற்சியை எப்போதுமே தன்னிலேயே வைத்திருக்கும் கலைஞன் அவர்.
தக்கையின்மீது பதியும் கண்கள், மீன் வேட்டைக்கு வேண்டுமானால் சாத்தியம், படைப்பாளிக்கல்ல.
எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மௌனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீரப் பார்வையால், முழுமையாய்ப் பருகினார்.
நட்பின், தோழமையின், துரோகத்தின், மரணத்தின், நீள அகலங்களை அமைக்கத் தெரியாத நம் குதூகல விளையாட்டினூடே, மெல்ல ஒரு விஷக் காற்று மாதிரி பரவிவிடுகிறது காலம்.
தன் படங்களுக்கு ஒளியின் அளவைக் கூட்டியும், குறைத்தும் கொடுத்துக் கொண்டிருந்த அக்கலைஞன், தன்மீது எந்த மிகை ஒளியும் விழ அனுமதிக்காதவர்
எல்லா மனிதர்களும் ஒன்றுபோலில்லை. தன் பிரியத்தை, உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவைப்படாத கலைஞர்களும் உண்டுதானே.
எல்லாத் துயரங்களையும் உதறி, வாழ்வு நம்மை ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.
எல்லா உணர்வுகளையும் மௌனத்தால், ஒரு ‘ம்’மால் மட்டுமே உள்வாங்கும் ஒரு கலைஞனின் பழக்கமென்றோ, எழுதி முடித்த அல்லது எடுத்து முடித்த ஒரு படைப்பைத் திரும்பிப் பார்க்கவும் சலிப்புற்று அடுத்ததை நோக்கிப் பயணிக்கும் ஒரு தகிக்கும் மனநிலையெனவோ, நான் இம்மௌனத்தைப் புரிந்து கொண்டேன்.
தீண்டல் வேண்டி காலம் காலமாய் காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் திமிர்ந்த உடலைப்போல, இன்னமும் கம்பம் பள்ளத்தாக்கின் உறைந்த மௌனம், தன்னையறிந்த ஒருவனின் ஸ்பரிசத்திற்குக் காத்திருக்கிறது.
மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான். சில சமயங்களில், அவனை ஏதோ ஒன்று நிலை தடுமாற வைக்கிறது. அவ்வளவுதான். இதுதான்
எதன் அதிகாரத்தாலோ இம்மலை எப்போதோ தனக்கு உடமையானது. இதன் நீளம், அகலம், இதில் உள்ள மரங்கள், கொடிகள், நீர்நிலைகள், சிறு அருவிகள், புதரின் மறைவில் உறங்கும் விலங்குகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதன் உடமையாளன். அப்படியிருக்க, இம்மலை மட்டுமே தன் சுவாசமாய், இதன் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் வாழும் இவன் எப்படி திருடனாவான்?
ஒரு அசல் கலைஞனுக்கு வார்த்தைகளின் விபரீதங்கள் நிச்சயமாய் தெரியாது. அவன் எப்போதும் இயல்பு நிலையற்றவன். பின்விளைவுகளின் கோரப்பற்களை அறியாதவன். ஆனால், தன் சக மனிதனை அள்ளி அணைத்து, தன் மடியில் கிடத்தி, தலைகோதி ஆறுதல்படுத்தும் தாயின் பரிவானவன் அவன். இதை அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிடாதபடி நம் வழக்கங்கள் மறிக்கின்றன.
இந்த ஜென்மத்துக்கும் போதுமான துயரத்தை நான் வாசிப்பின் வழியா மட்டும்தான் கடந்திருக்கேன்.