“வானத்திற்கு நிறமில்லை மகளே. அது எப்போதும் கண்களோடு விளையாடுகிறது. அதுபோலவே இந்த உலகமுமென்று சிலர் சொல்கின்றனர்” இன்மையைப் பற்றி கண்களை ஏமாற்ற நெய்தெடுத்த வண்ணப் போர்வைகளைக் குறித்து அவளிடம் சொல்வதற்கு எனக்கே புரியாதிருந்தது. இன்மை என்ற ஒன்று இல்லாதிருக்கலாம். காணவும் கேட்கவும் தொட்டறியவுமென உலகத்தில் ஏதேனும் சில எப்போதுமிருக்க வேண்டும். இன்மையின்மீது நினைவுகளும் கனவுகளுமென நாமும் போர்வைகள் நெய்து கொண்டிருக்கிறோமே! பிறந்து விழும் குழந்தைகள், உலகத்தைப் பார்க்கத் தொடங்கும்போது காணும் கனவு என்னவாக இருக்கும்? இப்போது வானம் வெளுத்திருந்தது.