More on this book
Kindle Notes & Highlights
by
Manoj Kuroor
Read between
December 24, 2024 - June 5, 2025
2005 இல் தான் கொற்றவை என்ற பெயரில் ஒரு தமிழ் நாவல் எழுதினேன். கொற்றவை என்ற பெயர் மட்டுமே அதன் தொடக்கமாக என் கையிலிருந்தது. “மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றுகந்த கோமளும் தான் படைத்த கொற்றத்தாள்” என்று கண்ணகியை இளங்கோ வாழ்த்துகிறார். கடைசியில் அந்த வரிகளைச் சென்றடைந்தேன். தியானிக்கத் தியானிக்க மேலதிக அர்த்தங்கள் பெருகி வந்த வார்த்தையது. கொற்றம் என்றால் அரசு என்றும் போர்வீரம் என்றும் அர்த்தமுண்டு. கொற்றவை என்றால் அரசி என்றும் போர்த்தெய்வம் என்றும் தமிழ் சொல்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தின் சாரமாக ஒற்றை வார்த்தையில் ‘கொற்றவை’ என்று சொல்லலாமெனத் தோன்றியது. அந்த
ஈரமூறிய மறைவிடங்களின் பழுதுகள் தேடி, மழைத்துளிகள் மூட்டைகளின்மேல் அலைந்து நடந்தன.
“வானத்திற்கு நிறமில்லை மகளே. அது எப்போதும் கண்களோடு விளையாடுகிறது. அதுபோலவே இந்த உலகமுமென்று சிலர் சொல்கின்றனர்” இன்மையைப் பற்றி கண்களை ஏமாற்ற நெய்தெடுத்த வண்ணப் போர்வைகளைக் குறித்து அவளிடம் சொல்வதற்கு எனக்கே புரியாதிருந்தது. இன்மை என்ற ஒன்று இல்லாதிருக்கலாம். காணவும் கேட்கவும் தொட்டறியவுமென உலகத்தில் ஏதேனும் சில எப்போதுமிருக்க வேண்டும். இன்மையின்மீது நினைவுகளும் கனவுகளுமென நாமும் போர்வைகள் நெய்து கொண்டிருக்கிறோமே! பிறந்து விழும் குழந்தைகள், உலகத்தைப் பார்க்கத் தொடங்கும்போது காணும் கனவு என்னவாக இருக்கும்? இப்போது வானம் வெளுத்திருந்தது.
பறவைகளைப் போலக் காற்றுவெளிகளில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச் செல்கிறோம்”
குறவர்கள் முதலைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் ஆற்றில் அவற்றைக் காண முடியவில்லை. எனினும் ஏதாவது சகதி போர்த்திய பாறைக்கடியில் மரத்துப்போன கொடுமையைப் போல அசைவற்றிருக்கும் ஒன்றினை ஒவ்வொருவரும் உள்ளுணர்வில் கண்டோம்.
தென்னை மடலிலிருந்து நாரைக் கிழித்தெடுக்கும் போதான ஓசையில் ஓர் அழுகை உள்ளிருந்து எழுவதை நான் அடக்கினேன்.