நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal]
Rate it:
10%
Flag icon
“இவளுக்கு மாண்புண்டெனில் இல்லாதவை எவை? இவளுக்கு மாண்பில்லையெனில் உள்ளவை எவை?”
22%
Flag icon
“அப்பா, பிறந்துவிழும் குழந்தைகளின் உள்ளத்திலும் இப்படித் தலைகீழான காட்சிகள்தான் தோன்றுமா? நேராகப் பார்ப்பது நாமா?  அவர்களா?”
Sugan liked this
38%
Flag icon
அனைவரும் ஒன்றாகவே இருப்போம் என்று நினைத்திருப்பவர்க்கெல்லாம் நாம் தனித்தனியானவர்களே என்பதை உணர உற்றாரின் மரணமே தேவைப்படுகிறது.
Sugan liked this
48%
Flag icon
கூத்தில் என் கூட்டாளி சந்தன்தான். என் மெய்வடிவுகளுக்கிடையேயான இல்லாமையைப் போக்கியிருந்த அந்த ஆணுடல், மற்றொரு இல்லாமையாக அருகே சேர்ந்து நிறைந்தது.
Sugan
· Flag
Sugan
Is this kind of friendzone? :-p
Thangavel Paramasivan
· Flag
Thangavel Paramasivan
She is on the limbo . 😂
50%
Flag icon
ஒரு காலடியால்கூட மற்றொன்றிற்கு நோவு ஏற்படுத்தாமலிருந்தால் எவ்வளவு நல்லது. ஒரு நிழலின் தழுவலாக எல்லாவற்றுடனும் நடக்க முடியுமென்றால் எப்படியிருக்கும் என்று நான் விழைந்தேன்.
51%
Flag icon
உடலோடு உடலுக்கும் உள்ளத்தோடு உள்ளத்துக்கும் தோன்றும் பொருளறிய முடியாத ஒரு நெருக்கம் என்றல்லாமல் வேறொன்றும் தோன்றவில்லை.
Thangavel Paramasivan
Infactuation
Sugan and 1 other person liked this
52%
Flag icon
அந்த வார்த்தைகளில் இருந்த காதலைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை. அவன் கூந்தலிழைகளைத் தடவியபோது என்னுள்ளிருந்த மற்றொருவள், அதன் கனிவில் இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.
Thangavel Paramasivan
Great part. Really enjoyed
Sugan and 1 other person liked this
67%
Flag icon
ஒரு நாளில் எண்தேர் செய்யும் தச்சன் முப்பது நாட்களில் செய்த தேர்க்கால் போன்றவன் அதியமான் நெடுமானஞ்சி.
Kaviya and 1 other person liked this
80%
Flag icon
உருளையைக் கூளி கொற்றவைக்கு உயர்த்திக் காட்டியது.