More on this book
Community
Kindle Notes & Highlights
வளைவுகளற்ற நீளமான மணற்கரைமீது பட்டுத்துணியை விரித்து விரித்து காட்டிக்கொண்டே இருப்பதுபோல அலை நுரை பரவியபடியே இருக்கும்.
சேவகம் செய்யும் கறுப்பர்கள் அவர்களின் சுயநலம் பாதிக்கப்படும்போது மாறாத பணிவுக்குள் காட்டும் உறுதியான எதிர்ப்பு. வெண்ணெய்க்குள் ஒளிந்திருக்கும் மீன்முள்போல தொண்டையில் குத்துவது.
யானையை அடிக்கலாம், வசைபாடலாம், துரத்தலாம். அது எந்த எல்லை வரை என்பதை எப்போதும் யானைதான் தீர்மானிக்கிறது.
முதன்முதலாக லண்டன் அவனுக்களித்த திகைப்பை நினைவுகூர்ந்தான். அது கச்சிதமாகச் செலுத்தப்பட்ட யந்திரம் போலிருந்தது. ஒவ்வொரு மனிதனும் இயந்திரப்பகுதி போலிருந்தான். அதில் அவன் மட்டும் பொருந்தாமலிருப்பதுபோல, இயந்திரத்தின் பிற உறுப்புகள் ஒவ்வொன்றும் அவனை நசுக்க வருவதுபோல தோன்றியது.