அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை
Rate it:
2%
Flag icon
நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை.
7%
Flag icon
படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, என் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ?
9%
Flag icon
ஒரு காலம் இருந்தது! தமிழர்கள் ஆரியரை, நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம், ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக்கூத்தாகக் கருதிய காலம்!
12%
Flag icon
எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக்குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.
14%
Flag icon
இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக் காட்டி நிற்பர்! பணிவர்! பகைவரை அடுத்துக் கெடுத்ததன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது.
14%
Flag icon
வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்!
14%
Flag icon
திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியாவான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.
16%
Flag icon
அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்று பிரசங்கம் புரிவானா?
27%
Flag icon
இந்நிலையில் இன்று இரைச்சலிடும் இந்துமகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது. இது ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூறமுடியுமானால் ஏற்படுத்தட்டும்!
27%
Flag icon
இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை?
30%
Flag icon
இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத் ராஜஸ்தான் ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.
31%
Flag icon
நர்மதை ஆறு, நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக்கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.
31%
Flag icon
திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள் என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பதுபோல் நடத்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகாசபையினரின் உண்மையான கருத்து.
39%
Flag icon
கொடுங்கோன்மைக்கு, மக்களைக் கசக்கிப் பிழிவதற்கு மிருகத்தனமாக நடத்துவதற்கு, மனுவைவிடச் சிறந்த குரு வேறு எங்கும் இராரே,
41%
Flag icon
“நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்? என்னை ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்டபோது, நெஞ்சம் திறக்கவில்லை!
41%
Flag icon
திராவிட நாட்டிலிருந்து ஆரியரை ஓட்ட அல்ல; ஆரியத்தை ஓட்ட!
51%
Flag icon
ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர். ஏர் உழுவது பாவமுள்ளதென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.