Ohmprakash Balaiah

46%
Flag icon
1936-ம் ஆண்டு. தனக்குப் பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொன்ன அந்தச் சிறுவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார். அவரால் அச்சிறுவன் சொன்னதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை; தன்னை அனுமதிக்காத எந்தச் சட்டகத்தையும் உடைத்து உள்ளே செல்ல ஒரே வழி போராட்டம் என்பதைத் தன்னுடைய 12 வயதிலேயே உணர்ந்து, அதை வெற்றிகரமாக நடத்தி, ஐந்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, கருணாநிதிதான்.