1996-ல் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஜெயிக்கவில்லை. மத்தியில் மதவாத ஆட்சி வந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்து, மாநிலக் கட்சிகள் ‘ஐக்கிய முன்னணி’யைக் கையில் எடுத்தபோது எல்லோருடைய தேர்வாகவும் இருந்தவர் வி.பி.சிங். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அடுத்ததாக உச்சரிக்கப்பட்ட பெயர் கருணாநிதி. ‘என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி உடனே அவர் மறுத்துவிட்டார். அடுத்து