More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
October 2 - October 17, 2019
அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ராஜேந்திரனும், சிவலிங்கமும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானார்கள்.
வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!
Pugazh Thyagarasan liked this
மத்திய அரசு என்பது மைய அரசுதானே தவிர, உச்ச அரசு அல்ல; அண்ணாவின் கூட்டாட்சிக் கொள்கை என்பது ஒரு தேசியக் கனவு.
‘கூட்டாட்சிக்கும் கூட்டணியாட்சிக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.’
1996-ல் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஜெயிக்கவில்லை. மத்தியில் மதவாத ஆட்சி வந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்து, மாநிலக் கட்சிகள் ‘ஐக்கிய முன்னணி’யைக் கையில் எடுத்தபோது எல்லோருடைய தேர்வாகவும் இருந்தவர் வி.பி.சிங். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அடுத்ததாக உச்சரிக்கப்பட்ட பெயர் கருணாநிதி. ‘என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி உடனே அவர் மறுத்துவிட்டார். அடுத்து
அரசியல் தலைவர்கள் மீதான தமிழ் மக்களின் வழிபாட்டு மனோபாவம் அசாதாரணமானதுதான்.
1936-ம் ஆண்டு. தனக்குப் பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொன்ன அந்தச் சிறுவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார். அவரால் அச்சிறுவன் சொன்னதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை; தன்னை அனுமதிக்காத எந்தச் சட்டகத்தையும் உடைத்து உள்ளே செல்ல ஒரே வழி போராட்டம் என்பதைத் தன்னுடைய 12 வயதிலேயே உணர்ந்து, அதை வெற்றிகரமாக நடத்தி, ஐந்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, கருணாநிதிதான்.
‘உலகத்தில் எல்லாவற்றுக்குமே இலக்கணம் உள்ளது. பிறப்பைப் பொறுத்து அல்ல; சிறப்பைப் பொறுத்து’