More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
June 2 - June 10, 2018
‘திராவிடன்’, ‘தமிழன்’ அடையாளங்களைப் பேசியவர்களில் முதன்மையானவர்.
டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோருடன் இணைந்து தியாகராயர் 1916-ல் உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமே பின்னாளில் அது நடத்திய பத்திரிகையின் (ஜஸ்டிஸ்) பெயரால் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ - நீதிக் கட்சி என்று அழைக்கப்படலானது. 1920-ல் நடந்த தேர்தலில் மதறாஸ் மாகாணத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது நீதிக் கட்சி. சென்னை மாநகராட்சியில் பதவியிலிருந்த காலத்தில் தியாகராயர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. இந்தியாவிலேயே முன்னோடியாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் இவரே!
பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வியில் சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதாவது, தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம். தமிழ்நாடு - 38.2%. குஜராத் - 17.6%; பாஜக ஆளும் வட மாநிலங்கள் மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; தேசிய சராசரி: 20.4%.