மாறன் மாமா என்னையும் செல்வியையும் சர்ச் பார்க் கான்வென்ட்டுல சேர்க்க அழைச்சுக்கிட்டுப் போயிருந்தார். அப்போ அங்கே கோ-எஜுகேஷன் சிஸ்டம் இருந்துச்சு. “ஸ்டாலின்கிற பெயரை மாத்தினாதான் சேர்த்துக்க முடியும்”னு சொல்லிட்டாங்க. தலைவருக்கு மாமா போன் பண்ணினார். “ஸ்டாலின்கிற பெயரை மாத்தணும்னு சொன்னா, அந்தப் பள்ளிக்கூடமே நமக்கு வேணாம்”னு சொல்லி, வேற ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லிட்டார்.