ஒரு விஷயத்தில் கருணாநிதி உறுதியாக இருந்தார். ‘இந்த முறை தெற்கைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆக வேண்டும்’ என்பதே அது. இதுதான் அடிப்படை. நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதி, மூப்பனார், முரசொலி மாறன் மூன்று பேரும் கடுமையாகப் பணியாற்றினார்கள்.