பாரதி ராஜா

48%
Flag icon
மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தானது. 1970 மார்ச் 21-ல் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் சேலம் இரும்பு ஆலைக்கான அறிவிப்புக்குத் தீவிரமாக வலியுறுத்தி, ஏப்ரல் 17 அன்று இந்திரா காந்தியால் அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவும் செய்தார் கருணாநிதி. உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இந்திராவுக்கு இருந்த ஆர்வம் கருணாநிதியின் உரிமைக் குரலுக்கு உதவுவதில் இல்லை. அதிகாரக் குவிப்பில் ஆர்வம் மிக்கவரான அவருடைய அமைச்சரவையிலும் பலர், மாநிலங்களின் உரிமைகளை உரக்கப் பேசிய கருணாநிதியை ரசிக்கவில்லை.