இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இவற்றில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பவை. குஜராத்தில் வெறும் 3. மபி, உபி, ராஜஸ்தான் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லை. இதேபோல, முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை - 24; குஜராத் - 2; மபி - 0; உபி - 7; ராஜஸ்தான் - 4.