கெடுவின்படி ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட்டு, 1965 ஜனவரி 26 முதல் இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கைகள் தொடங்கிய போது, 1964-ல் கிளர்ந்தெழுந்தது தமிழகம். “அய்யா தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள்” என்று கெஞ்சிய இளைஞரைப் பார்த்து, “இந்தப் பைத்தியத்தைக் கைதுசெய்யுங்கள்” என்று போலீஸாருக்கு உத்தரவு போட்டார் காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம்.