திராவிட இயக்கம் தன்னுடைய வருங்காலத்துக்கு ஊறு விளைவிக்குமோ என்று அஞ்சி 1944-45-ல் அண்ணாவின், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்திலிருந்து எம்ஜிஆர் விலகிக்கொண்டதும், அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்த கணேசன், பின்னர் சிவாஜி கணேசனாக உருவெடுத்ததும் வரலாறு. அதே எம்ஜிஆர் தன்னைத் திராவிட இயக்கத்தோடும் கருணாநிதியோடும் இறுக இணைத்துக்கொண்ட வித்தையும் நடந்தது. இருவரும் இணைந்து உருவாக்கிய ‘மலைக்கள்ளன்’ (1954) அவர்களின் கூட்டுறவைப் பறைசாற்றியது. ‘உலகத்தில் எல்லாவற்றுக்குமே இலக்கணம் உள்ளது. பிறப்பைப் பொறுத்து அல்ல; சிறப்பைப் பொறுத்து’ எனும் வசனம் புகழ்பெற்றது. அவ்வாண்டு ஒரு நாடக நிகழ்ச்சியில் ‘புரட்சி
...more