கட்சியில் இருந்தே கருணாநிதியை விலகச் சொன்னவர்களும் உண்டு. “கப்பலின் தலைவன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை” எனச் சொல்லிவிட்டார் கருணாநிதி. 1977 மார்ச் 21-ல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. ஆனால், கருணாநிதிக்கும் திமுகவுக்கும் மேலும் சோதனைகள் காத்திருந்தன. 1977 ஜூன் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது.