வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் அவர் வைத்த கூட்டணி திமுகவின் மதச்சார்பின்மைப் பயணத்தில் ஒரு களங்கம் ஆனது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2-ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு, குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளுக்குக் கட்சி பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்தது. அதேபோல, 2008-09 இலங்கை இறுதிப் போர் காலகட்டத்தில் திமுக ஈழத் தமிழர்களுக்காக எவ்வளவு காரியங்களை முன்னெடுத்தபோதிலும் போதுமான அளவு துணை நிற்கவில்லை என்ற கடும் விமர்சனத்துக்குள்ளானார் கருணாநிதி.