கம்யூனிஸ்ட்கள் பெரியாரை விமர்சித்தார்கள், “பிரகாசம் பிராமணர்; ராஜாஜி பிராமணர் இல்லையா?” என்று! “கம்யூனிஸ்ட்களை சுட்டுக்கொன்றவர் பிரகாசம். ராஜாஜி அப்படிப்பட்டவர் கிடையாது. மேலும், ஆந்திர பிராமணரா, தமிழ்நாட்டுப் பிராமணரா என்று கேட்டால், நான் தமிழ்நாட்டுப் பிராமணரையே தேர்ந்தெடுப்பேன்” என்று பதில் சொன்னார் பெரியார். அவருடைய தனிப்பட்ட வாழ்வில் மிக முக்கியமான முடிவை எடுக்கையில் ராஜாஜியுடன்தானே கலந்தாலோசித்தார்! ராஜாஜியின் யோசனையை அவர் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.