எல்லோருடைய தேர்வாகவும் இருந்தவர் வி.பி.சிங். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அடுத்ததாக உச்சரிக்கப்பட்ட பெயர் கருணாநிதி. ‘என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி உடனே அவர் மறுத்துவிட்டார். அடுத்து மூப்பனார் பெயர் முன்மொழியப்பட்டபோது, பலர் அவருக்குச் சாதகமாக இல்லை.