கலைஞர்தான் நம்ம சனங்களுக்கு நல்லது செய்வாரு. நாம இப்ப உட்கார்ந்திருக்கிற இந்த வீடுகூட அவர் கட்டித் தந்ததுதான். நாம கலைஞர் கட்சியில இருந்தாதான் குடித்தெருவுல சைக்கிள்ல போக முடியும். செருப்பு போட்டுக்கிட்டுப் போக முடியும். தோள்ல துண்டு போட்டுக்கிட்டுப் போக முடியும். குடித்தெரு டீக்கடையில டீ குடிக்க முடியும். டீ குடிச்ச டம்ளர கழுவி வைக்க வேண்டியதில்ல. நம்ம ஆளுங்களுக்குத் தனி டம்ளர் இருக்காது. தரையில உட்கார்ந்து இட்லி சாப்பிடாம பெஞ்ச்சுல உட்கார்ந்து இட்லி சாப்பிடலாம். பண்ணை வேல செய்ய வேண்டாம். என்னை மாதிரி மீசையும் கிருதாவும் வெச்சிக்கலாம். கட்சி வேட்டி கட்டிக்கலாம். கட்சித் துண்டு போட்டுக்கலாம்.
...more