“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே!” என்ற பகுத்தறிவுப் பிரச்சாரம், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களையும் வசீகரித்தது. இசைத்தட்டுக்கள் ஒலித்த இடங்களில் ‘பராசக்தி’யின் வசன ஒலித்தட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கின. கருணாநிதியையும் ‘பராசக்தி’யையும் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் காங்கிரஸார்.

