நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25, 1975 அன்றிலிருந்தே ஆட்சியே போனாலும் அதனை எதிர்ப்பது என்ற நிலையில்தான் கருணாநிதி இருந்தார். 24 மணி நேரத்திற்குள் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. விடியற்காலை 4 மணிக்கு கருணாநிதி தயாரித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக கட்சிரீதியான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பெருமிதம் திமுகவுக்கு உண்டு!