‘என்ன கிருஷ்ணா மட்டும் எப்போதும் சென்னைக்குப் போகிறார். ராஜ்குமாரை மீட்பதில் கருணாநிதிக்கு அக்கறை இல்லையா; அவர் பெங்களூரு வர மாட்டாரா?’ என்றெல்லாம் பேசினார்கள். என் சங்கடத்தைப் புரிந்துகொண்ட அவர் பெங்களூரு வந்தார். அனைத்துக் கட்சியினரிடமும் பேசினார். ராஜ்குமாரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும் பத்திரிகையாளர் சந்திப்பில், சில பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கும் கேள்விகளைக் கேட்டார்கள். ‘ஏன் தமிழிலே பேசுகிறீர்கள், கன்னடத்தில் பேச மாட்டீர்களா?’ என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், கருணாநிதி எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்கொண்டார்.