1971 தேர்தலில் கருணாநிதி தலைமையில், எம்ஜிஆரின் பிரச்சாரத்தில் காமராஜர்-ராஜாஜி கூட்டணியை வீழ்த்தி 184 இடங்களைப் பிடித்துப் பெரும் சாதனையை நிகழ்த்தியது திமுக! பேருந்துகள் நாட்டுடைமை, குடிசை மாற்று வாரியம், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள், இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கை ரிக்ஷா ஒழிப்பு, சிப்காட், புஞ்சை நிலங்களுக்கு நிலவரி எடுத்தது என்று ஏராளமான திட்டங்களைத் தந்தது கருணாநிதி அரசு. ஆனால் ஊழல், அதிகார மமதை என்றும் பேச்சுகள் எழுந்திருந்தன. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று அமைச்சர்களை நீக்கியிருந்தார் கருணாநிதி. ஆனாலும் மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும் மோகன் குமாரமங்கலமும் திமுக ஆட்சியைத் தொடர்ந்து
...more