முதலில் நீதிக் கட்சி அதை ஒரு சின்ன அளவில் கொண்டுவருகிறது. பின்னாளில், காமராஜர் அதை மதிய உணவுத் திட்டமாகக் கொண்டுவருகிறார். எம்ஜிஆர் அதைச் சத்துணவாக்குகிறார். எம்ஜிஆர் பெயரிலேயே இருந்தாலும்கூட அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றாமல் கலைஞர் அதை மேலும் மேம்படுத்துகிறார். சனிக்கிழமையும் சேர்த்து வாரம் ஆறு முட்டை போடுகிறார். அடுத்து ஜெயலலிதா அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறார். எவ்வளவு பெரிய தொடர்ச்சி! தொடக்கத்தில் “இது திட்டம் இல்லை. சாப்பிடுவது எப்படி வளர்ச்சிக் கணக்கில் வரும்?” என்று ஏகடியம் பேசிய திட்டக் குழு, பின்னாளில் சத்துணவுத்
முதலில் நீதிக் கட்சி அதை ஒரு சின்ன அளவில் கொண்டுவருகிறது. பின்னாளில், காமராஜர் அதை மதிய உணவுத் திட்டமாகக் கொண்டுவருகிறார். எம்ஜிஆர் அதைச் சத்துணவாக்குகிறார். எம்ஜிஆர் பெயரிலேயே இருந்தாலும்கூட அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றாமல் கலைஞர் அதை மேலும் மேம்படுத்துகிறார். சனிக்கிழமையும் சேர்த்து வாரம் ஆறு முட்டை போடுகிறார். அடுத்து ஜெயலலிதா அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறார். எவ்வளவு பெரிய தொடர்ச்சி! தொடக்கத்தில் “இது திட்டம் இல்லை. சாப்பிடுவது எப்படி வளர்ச்சிக் கணக்கில் வரும்?” என்று ஏகடியம் பேசிய திட்டக் குழு, பின்னாளில் சத்துணவுத் திட்டத்தை ஒரு தேசியக் கொள்கையாக அறிவித்தது. அதாவது, 45 வருடங்களுக்குப் பிறகு. ஆனாலும், வெற்றி பெறவில்லை! ஏன்? இங்கேதான் சமூக நீதிக்கு ஒரு அரசியல் இயக்கம் கொடுக்கும் முக்கியத்துவம் வருகிறது. சாதிக்கு எதிரான திராவிட இயக்கத்தின் போராட்டம் சாதி உணர்வை இங்கே ஒழிக்கவில்லை என்றாலும், சாதி வெறியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. ஆனால், ஏனைய மாநிலங்களின் நிலை அதுவல்ல. பல மாநிலங்களில் சத்துணவுக்கூடம் வந்தபோது, எல்லாச் சாதியினரும் எப்படி ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஒரே சாப்பாட்டைச் சாப்பிடுவது என்ற பிரச்சினை வந்தது. பிஹாரில் முதல் சமையல் கூடம் திறக்கப்பட்டபோது, சமையலர் ஒரு தலித் பெண் என்பதற்காக அந்த உணவையே கொண்டுபோய்க் கொட்டினார்கள். நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதித்தது. என்ன விவாதித்தது? சாப்பாட்டுக்குப் பதில் பேசாமல் பிஸ்கட் கொடுத்துவிடலாமா என்று விவாதித்தது. ஆனால், “ஏன் பிராமணப் பிள்ளைகளுக்கும் ஏனைய பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு போட மறுக்கிறீர்கள்?” என்று சேரன்மாதேவி குருகுலம் விவகாரத்தில் வ.வே.ச...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.