பெரியார் பொது ஒழுக்கத்தை ரொம்பவும் மதிப்பார். கூட்டத்தில் கடவுள் வாழ்த்து என்று சொன்னதும் எழுந்து நின்றுவிடுவார். அப்புறம் அதே கூட்டத்தில் “கடவுள் இல்லை” என்றும் பேசுவார். “பொது ஒழுக்கம் சமூகத்தால் கட்டப்பட்டது; அதைச் சிதைப்பது நம் வேலை இல்லை!” என்பார். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை உண்டு. ஏனென்றால், அதுதான் உங்களுக்கு ஒரு தார்மிகத் தகுதியையும் பலத்தையும் தருகிறது.