1960-ல் உட்கட்சிப் பூசல்கள் இடையே அண்ணாவே பொதுச்செயலாளர் ஆனார். ஈ.வெ.கி.சம்பத் அவைத் தலைவர். கருணாநிதி பொருளாளர். சம்பத்தின் குடும்பப் பின்னணி இல்லாமலும், நாவலரின் உயர் கல்வி இல்லாமலும் தனது ஆற்றலால், உழைப்பால் பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. அடுத்த ஆண்டு சம்பத் கட்சியிலிருந்து வெளியேறினார். கட்சியில் திரைத் துறையினரின் ஆதிக்கம் அதிகரித்துவருவதையும் வெளியேற்றத்துக்கு அவர் ஒரு காரணமாய்ச் சொன்னார்.