ஒரு நாள் ரஜினி என்னைக் கூப்பிட்டார். ‘‘கிருஷ்ணாதான் கருணாநிதியைப் பார்க்கப் போகணுமா? ஏன் கருணாநிதி இங்கே வர மாட்டாரான்னு அங்கே எதிர்க்கட்சிங்க ரொம்ப பிரச்சினை செய்றாங்க’’ன்னார். ‘‘நான் இது அநியாயமா இருக்கே! இப்படியெல்லாமாகூடப் பேசுவாங்க!’’ன்னு கேட்டேன். கலைஞர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ இதைச் சொன்னேன். உடனே கொஞ்சமும் தயங்காம ‘‘அப்ப ஒண்ணு செய்வோம். தமிழ்நாடு சார்புல நீங்க முதல்ல அங்கே போய்ப் பார்த்துட்டு வாங்க. ரெண்டு நாள்ல நானும் வர்றேன்’’னார்.