பாரதி ராஜா

47%
Flag icon
வேட்பாளர்களை அறிவிக்கும்போது சைதாப்பேட்டை என்று நிறுத்தி “11 லட்சம்” என்றார் அண்ணா. பெரும் ஆரவாரம்! பரங்கிமலை தொகுதிக்கு எம்ஜிஆர் நிறுத்தப்பட்டிருந்தார். அந்தத் தேர்தலில் திமுக வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். 1967-ல் நாவலருக்கு அடுத்து அண்ணா அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்ற கருணாநிதி, பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் வீராணம் திட்டத்துக்கு வித்திட்டதும் முக்கியமான செயல்பாடுகளாகப் பேசப்பட்டன.