1963-லிருந்து இந்தி எதிர்ப்புப் போர், கழகத்தைப் பம்பரமாய்ச் சுழல வைத்தது. 1965 ஜனவரி 26-ஐத் துக்க நாளாகக் கொண்டாட முடிவெடுத்தது திமுக. மாணவர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1965 பிப்ரவரி 16 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாநிதி.