லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம் இது கோபால். இன்னிக்கு நாம இறங்கிப்போனா நாளைக்கு காவிரி உட்பட பல விஷயங்கள்ல தமிழ்நாட்டோட இணக்கமா அவங்க வர இது உதவும். நாம இறங்கிப்போறதால ஒண்ணும் மோசம் போகப்போறதில்லை’’ன்னு சொன்னார். கிருஷ்ணாவை மட்டும் இல்லை; அனைத்துக் கட்சிக்காரங்களையும் சந்திச்சார். ராஜ்குமார் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொன்னார். எப்படியும் மீட்டுடுவோம்னார். அங்கே ஒரு பிரஸ்மீட் நடந்துச்சு. ரொம்ப ஆத்திரமூட்டுற வகையிலேயும் அவமானப்படுத்துற வகையிலேயும் கேள்விகள் கேட்டாங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். மறுநாள் இது சம்பந்தமா நான் கேட்டப்போ, ‘‘நாம தனி மனுஷன் இல்லை; பொது
...more