பல முறை அவரிடம் கருத்து வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கேன். “கட்சிக்குள் என்னோடு சண்டை போடுபவர்கள் இருவர். ஒருவர் மாறன், இன்னொருவர் நாகநாதன்” என்றே சொல்லியிருக்கிறார். காலையில் கடுமையான விவாதம் நடந்திருக்கும். இரவு தொலைபேசியில் அழைப்பார். “நாகநாதன், என்ன கோச்சுக்கிட்டியா? உன் கருத்தை நீ சொன்னய்யா, சரியாக்கூட இருக்கலாம். என் கருத்தை நான் சொன்னேன். பேசுவோம். நாளைக்குக் காலையில வாக்கிங் வராம இருந்திடாத!” என்பார். அவர் அதிகாரத்தின் எவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் இந்தத் தன்மையை இழந்ததில்லை. நெருக்கடி நிலையின்போது திமுகவுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. கலைஞர், நாவலர், நான்
...more