1962-ல் 50 சட்ட மன்ற இடங்களை திமுக பிடிக்க, ‘திராவிட நாடு’ முழக்கம் மேலும் அதிகரித்தது. அடுத்த ஆண்டு பிரிவினை பேசும் கட்சிகளுக்குத் தடை போடும் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது நேரு அரசு. கட்சி முடக்கப்படுவதைத் தடுக்க அண்ணா ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார். தமிழகத்தின் நலன்களுக்காக இப்போது மாநில சுயாட்சி முழக்கத்தை அவர் கையில் எடுத்தார்.