அடுத்த ஆறு மாதங்கள் இந்தியாவின் ஜனநாயகத் தீவாக தமிழகம் இருந்தது. விளைவாக, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் இன்றைய செயல் தலைவர் ஸ்டாலின், முரசொலி மாறன் உட்பட 20,000 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். வதைகளை எதிர்கொண்டனர். ஒன்றரையாண்டு தொடர் எதிர்ப்பின் விளைவாக 1977-ல் தேர்தலை அறிவித்தார் இந்திரா.

