பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 7,000. இந்தக் காலகட்டத்திலேயே எம்ஜிஆர் உட்பட எல்லோராலும் அவர் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படவுமானார். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு மிக்க பிரச்சாரகராக இருந்த நடிகர் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன் அவருக்குக் கொடுத்த பட்டம் அது. கருணாநிதி முதல்வரானதும், “கருணாநிதியா? அவர் மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? தகராறு செய்யக் கூடியவர் என்று கேள்விப்பட்டேனே!” என்பதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் எதிர்வினையாக இருந்தது. அடுத்த சில மாதங்களில் கருணாநிதி, “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்றார்.
...more

