இளம் வயதில் என்னை இரண்டு விஷயங்கள் பெரிதும் செதுக்கின. ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று, சினிமா. பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி, போன்றவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்த இயக்கம் அது. 50 வருடங்களாக திரைப்படத் தலைப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் தமிழைப் பயன்படுத்துகிறேன் என்றால், காரணம் கலைஞர்.