நெருக்கடிநிலைக் காலகட்டம். தணிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் கை வைப்பார்கள் அதிகாரிகள். அப்படியும் ரொம்பப் பூடகமாக இலக்கிய நடையில் சில விஷயங்களை உள்ளே தள்ளிவிடுவார் தலைவர். அவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கி ‘எப்படி இதையெல்லாம் விட்டார்கள் தணிக்கை அதிகாரிகள்?’ என்று கேட்டு ‘மக்கள் குரல்’ பத்திரிகையில் எழுதுவார்கள். விளைவாக, எழுதப்படும் எல்லாவற்றையுமே தூக்கிவிட ஆரம்பித்தார்கள் அதிகாரிகள். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய்தான், ‘வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் பகடிசெய்து எழுத ஆரம்பித்தார்.