சட்டநாதன் ஆணையம் அமைத்த திமுக அரசு, அதன் பரிந்துரையின்பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 25% இடஒதுக்கீட்டை 31% ஆக மாற்றியமைத்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு 16%-லிருந்து 18%-ஆகவும் மாற்றியமைத்தது. பிறப்பைக் கருத்தில் கொள்ளாமல் தகுதியுடைய அனைவரும் அர்ச்சகராகலாம் என்று 1970 டிசம்பர் 2-ல் சட்டம் இயற்றப்பட்டது.