தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்து, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று உருக்கமாகத் தண்ணீர் கேட்டார் கருணாநிதி. நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர். ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று தேவராஜ் அர்ஸிடம் எச்சரித்துவிட்டு வந்திருந்தேன். முதல்வரைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பார்க்காத சூழலில், என்னையும் வந்து சந்தித்தார். ‘நீங்களும் ஒரு விவசாயி. சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனது வையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது.