வீட்டில் இருக்கிற பெண்பிள்ளைடீ. இது புரியாது தான். முதன்மையாய் நின்றவனை விட்டு விட்டு முடங்கிக் கொள் என்று சுலபமாய்ச் சொல்ல முடியுமே தவிர, இதன் கடுமை எத்தகையது என்று புரியாத குணம். ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தில் முந்நூறு வோட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவன் உதறிவிட்டு சாதாரணத் தொழிலாளி ஆவது கடினம். பிரச்னைகளையே சந்தித்துச் சந்தித்துப் பழகியவன் பேசாமல் நகர்வது முடியாத காரியம். பட்டயமும் கவசமும் ஏந்திய போர் வீரன் காவித் துணியுடன், கமண்டலத்துடன் நடப்பது லட்சத்தில் ஒருவருக்குத்தான் முடியும். பளுதூக்கிப் பழகுபவனுக்குப் பளுவின் எடை கூடிக் கொண்டே போவதுதான் சந்தோஷம். பிரச்னையே இல்லை என்கிற
...more

